இந்தியா

இந்த மாத கடைசியில் திருப்பதிக்கு போறீங்களா... அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க....

Published On 2023-10-02 03:39 GMT   |   Update On 2023-10-02 03:39 GMT
  • சந்திர கிரகணம் காரணமாக கோவில் 8 மணி நேரம் மூடப்பட்டிருக்கும்.
  • சகஸ்ர தீபாலங்கார சேவை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் சந்திர மற்றும் சூரிய கிரகண காலங்களில் மூடப்படுவது வழக்கம். கிரகணம் முடிந்த பின் வைகானச ஆகம விதிப்படி சுத்தி செய்து ஆடைகள் அணிவித்து ஏழுமலையானுக்கு புண்ணியாவசனம் செய்து பின்னர் கோவில் நடை திறக்கப்படும். வருகிற அக்டோபர் 29-ந் தேதி அதிகாலை 1.05 மணி முதல் 2.22 மணி வரை சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது. கிரகண காலத்துக்கு 6 மணி நேரத்துக்கு முன்பு கோவில் மூடப்படுவது வழக்கம்.

எனவே அக்டோபர் 28-ந்தேதி இரவு 7.05 மணிக்கு ஏகாந்தத்தில் சுத்தி மற்றும் சுப்ரபாத சேவை செய்த பிறகு அதிகாலை 3.15 மணிக்கு கோவில் கதவுகள் திறக்கப்படும். சந்திர கிரகணம் காரணமாக கோவில் 8 மணி நேரம் மூடப்பட்டிருக்கும். சகஸ்ர தீபாலங்கார சேவை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு அதற்கேற்ப தங்கள் யாத்திரையை திட்டமிடுமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

Tags:    

Similar News