இந்தியா

நாட்டின் முதல் நதிகள் இணைப்பு திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல்

Published On 2024-12-25 09:09 GMT   |   Update On 2024-12-25 11:49 GMT
  • 21-ம் நூற்றாண்டில் நீர் வளங்களை நன்றாக நிர்வகிக்கும் நாடுகள் மட்டுமே முன்னேற்றம் காண முடியும்.
  • இரு ஆறுகளை இணைக்கும் திட்டத்தை அமல்படுத்தும் முதல் மாநிலம் மத்திய பிரதேசம் ஆகும்.

மத்திய பிரதேச மாநிலத்தில் கென்-பெட்வா ஆறுகளை இணைக்கும் திட்டத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.

அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி பேசியதாவது:-

* 21-ம் நூற்றாண்டில் நீர் வளங்களை நன்றாக நிர்வகிக்கும் நாடுகள் மட்டுமே முன்னேற்றம் காண முடியும்.

* இரு ஆறுகளை இணைக்கும் திட்டத்தை அமல்படுத்தும் முதல் மாநிலம் மத்திய பிரதேசம் ஆகும்.

* கென்-பெட்வா நதி இணைப்புத் திட்டம் பண்டல்கண்ட் பகுதியில் செழிப்பு மற்றும் மகிழ்ச்சிக்கான புதிய கதவுகளைத் திறக்கும்.

* நாட்டில் நீர்வள மேம்பாட்டிற்கான பெருமை பி.ஆர். அம்பேத்கரையே சாரும். காங்கிரஸ் இந்த உண்மையை மக்களிடமிருந்து மறைத்தது.

* ஆட்சியும், காங்கிரசும் ஒன்றாக இணைந்து செல்லவில்லை.

* அடிக்கல் நாட்டிய பிறகு கூடு, காங்கிரஸ் அரசு 35 முதல் 40 ஆண்டுகள் வரை திட்டத்தை தாமதப்படுத்தியது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

அத்துடன் கஜுராஹோவில் இருந்து கந்த்வாரா மாவட்டத்தில் ஓம்கரேஷ்வர் பிளோட்டிங் சோலார் திட்டத்தை திறந்து வைத்தார். மறைந்த பிரதமர் வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளில் நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டுள்ளார்.

Tags:    

Similar News