தெலுங்கானா காங்கிரஸ் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்த டிஜிபி
- தெலுங்கானாவில் காங்கிரஸ் 60 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.
- ஆளும் கட்சியான பி.ஆர்.எஸ் 40 இடங்களில் முன்னிலை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடந்து வருகிறது.
அதில், மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 60 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.
அங்கு ஆளும் கட்சியான பி.ஆர்.எஸ் 40 இடங்களில் முன்னிலை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
இதையடுத்து, வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் உள்ளதால் ஐதராபாத்தில் வெற்றியை கொண்டாடும் விதமாக ரேவந்த் ரெட்டி காரில் பேரணி சென்றார். அவரை தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
இந்நிலையில், தெலுங்கானா டிஜிபி அஞ்சனி குமார் மற்றும் பிற காவல்துறை அதிகாரிகள், மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியை ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், ரேவந்த் ரெட்டி ஐதராபாத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமாரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
#WATCH | Telangana Congress chief Revanth Reddy along with party leaders DK Shivakumar and others celebrates the party's lead in the state elections, in Hyderabad pic.twitter.com/jW0eRTSF4s
— ANI (@ANI) December 3, 2023