null
அருணாச்சல பிரதேசத்தில் 6,488 மீட்டர் உயர மலையில் ஏறி தெலுங்கானா மாணவர் சாதனை
- மலையின் உச்சிக்குச் சென்ற யஷ்வந்த் அங்கிருந்த உச்சியில் இந்திய தேசிய கொடியை நாட்டினார்.
- ராணுவ வீரர் அல்லாத கல்லூரி மாணவர் ஒருவர் இந்த மலையை ஏறியது இதுவே முதல்முறை.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், மெகபூபாபாத் மாவட்டம், பழங்குடியினத்தை சேர்ந்தவர் யஷ்வந்த். இவர் அங்குள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த மாதம் 19-ந் தேதி யஷ்வந்த் மகாராஷ்டிரா, குஜராத், அருணாச்சல பிரதேசம், ஆந்திரா மாநிலங்களை சேர்ந்த 7 பேர் குழுவாக சேர்ந்து அருணாச்சல பிரதேசத்தில் உள்ள கோரிசென் மலைக்கு சென்றனர்.
6,488 மீட்டர் உயரம் உள்ள கரடு முரடான மலையில் ஏறி உச்சிக்கு சென்றார். யஷ்வந்துடன் வந்தவர்கள் மலையேற முடியாமல் பாதி வழியில் தவித்தனர். மலையின் உச்சிக்குச் சென்ற யஷ்வந்த் அங்கிருந்த உச்சியில் இந்திய தேசிய கொடியை நாட்டினார்.
ஏற்கனவே 2016-ம் ஆண்டு ராணுவ வீரர்கள் மட்டுமே கோரிசென் மலை ஏறினர். ராணுவ வீரர் அல்லாத கல்லூரி மாணவர் ஒருவர் இந்த மலையை ஏறியது இதுவே முதல்முறை.
மலை உச்சியில் மாணவர்கள் போதைக்கு அடிமையாகக் கூடாது. பெண்களை மதிப்போம். வன்முறையை நிராகரிப்போம் என்ற விழிப்புணர்வு பதாகைகளை காட்டினார். மேலும் தற்போது 8,849 மீட்டர் உயரம் உள்ள எவரெஸ்ட் சிகரத்தை ஏறுவதில் கவனம் செலுத்தி வருகிறார்.