இந்தியா

அஸ்வினி வைஷ்ணவ்          புல்லட் ரெயில்

புல்லட் ரெயில் திட்டம்- முழு வேகத்தில் பணிகள் நடைபெறுவதாக ரெயில்வே மந்திரி தகவல்

Published On 2022-06-06 19:16 GMT   |   Update On 2022-06-06 19:16 GMT
  • நாட்டின் வலிமை மிக்க பொறியாளர்களின் முயற்சியால் புல்லட் ரெயில் என்ற கனவு நனவாகும்
  • புல்லட் ரெயில் திட்டமிட்ட நேரத்தில் முழு வேகத்தில் இயக்கப்படும்

சூரத்:

அகமதாபாத்-மும்பை இடையேயான புல்லட் ரெயில் திட்டத்திற்காக குஜராத் மாநிலத்தில் 98 சதவீதத்திற்கும் அதிகமான நிலம் கையகப்படுத்தும் பணியும், தாதர் நகர் ஹவேலியில் 100 சதவீதமும், மகாராஷ்டிரா மாநிலத்தில் சுமார் 508 கி.மீ தூரத்திற்கு புல்லட் ரயில் பாதைக்கு 71 சதவீத நிலம் கையகப்படுத்தும் பணிகளும் முடிவடைந்துள்ளது.

இதில், குஜராத்தின் 8 மாவட்டங்கள் வழியாக செல்லும் 352 கி.மீ., நடைபாதையில் உள்ள ஸ்டேஷன்களுக்கு பல்வேறு பகுதிகளில் பைல்ஸ், அஸ்திவாரம், தூண்கள், பையர் கேப்கள், கர்டர்கள் வார்ப்பு மற்றும் அமைக்கும் பணியும் வேகமாக நடந்து வருகிறது.

இந்த திட்டத்தி; புல்லட் ரெயில், மெட்ரோ, பிஆர்டி மற்றும் சபர்மதியில் உள்ள இரண்டு இந்திய ரெயில் நிலையங்களை ஒருங்கிணைக்கும் பயணிகள் முனையம் ஆகியவை ஆகஸ்ட் 2022 க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், குஜராத் மாநிலம் சூரத்-நவ்சாரி இடையே நடைபெறும் புல்லட் ரெயில் திட்டப் பணிகளை ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

புல்லட் ரெயில் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. சுமார் 60 கி.மீ தூரம் தூண் அமைக்கும் பணி முடிந்துள்ளது. ஒரே நேரத்தில் 150 கி.மீ.க்கு பணிகள் நடந்து வருகின்றன. அனைத்து பாலங்கள் மற்றும் ரெயில் நிலையங்களிலும் ஒரே நேரத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் பிரிவு 2026 ஆம் ஆண்டு என்ற இலக்குடன் சூரத்தில் இருந்து பிலிமோரா வரை பணிகள் மிக வேகமாக நடைபெறுகின்றன. புல்லட் ரெயில் திட்டமிட்ட நேரத்தில் முழு வேகத்தில் இயக்கப்படும்

அகமதாபாத்-மும்பை புல்லட் ரெயில் திட்டத்தை நிறைவேற்ற எங்கள் பிரதமரின் கருத்துப்படி, எந்தவொரு பெரிய வேலையையும் செய்ய அனைவரின் முயற்சியும் தேவை. உங்களின் முயற்சிகளை மேற்கொள்ளுமாறு மகாராஷ்டிராக அரசை கேட்டுக் கொள்கிறேன். அகமதாபாத்தைப் போல மும்பைக்கும் புல்லட் ரெயில் தேவை. இந்தத் திட்டத்தில் அரசியல் இருக்கக் கூடாது.

இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 1 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அனைத்து வகையான வேலைகளையும் செய்யும் நபர்களும் இதில் அடங்குவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News