இந்தியா

ரேவண்ணா ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது

Published On 2024-05-09 04:23 GMT   |   Update On 2024-05-09 04:23 GMT
  • சர்வதேச அளவில் பிரஜ்வால் ரேவண்ணாவை போலீசார் தேடிவருகிறார்கள்.
  • விமான நிலையங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

பெங்களூரு:

கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஆபாச வீடியோ தொடர்பாக ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா தேடிப்படும் நபராக அறிவிக்க்ப்பட்டு லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பிரஜ்வாலின் தந்தையும், எம்.எல்.ஏவுமான ரேவண்ணா ஆகியோர் மீது வீட்டு பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் பிரஜ்வாலுடன் ஆபாச வீடியோவில் இருந்த ஒரு பெண் கடத்தப்பட்ட சம்பவத்திலும் ரேவண்ணா மற்றும் அவரது உறவினர் சதீஸ்பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரேவண்ணாவை போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணை முடிவடைந்து மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று மாலை பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கபட்டார்.

இதற்கிடையே எச்.டி.ரேவண்ணா ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு நேற்று கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனு மீதான விசாரணையை இன்றைக்கு (வியாழக்கிழமை) நீதிபதி ஒத்தி வைத்தார். அதனால் எச்.டி.ரேவண்ணா சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வருவாரா? இல்லையா? என்பது இன்று தெரியவரும்.

இதற்கிடையே ஆபாச வீடியோ சர்ச்சை தொடர்பான விசாரணைக்கு ஆஜராக பிரஜ்வால் ரேவண்ணா 7 நாட்கள் காலஅவகாசம் கேட்டிருந்தார். அந்த காலஅவகாசம் நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து சர்வதேச அளவில் பிரஜ்வால் ரேவண்ணாவை போலீசார் தேடிவருகிறார்கள்.

பிரஜ்வால் ரேவண்ணா எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு திரும்பலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அவரை கைது செய்ய விமான நிலையங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News