இந்தியா

சபியாவின் எலும்புகளை ஒரு வாலிபர் அட்டைப்பெட்டியில் வைத்து எடுத்து வந்த காட்சி.

null

பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் எலும்புகள் 18 ஆண்டுகளுக்கு பிறகு அடக்கம்

Published On 2024-11-14 03:49 GMT   |   Update On 2024-11-14 04:19 GMT
  • சிறுமியை ஹம்சாவும், அவரது மைத்துனர் அப்துல்லாவும் சேர்ந்து தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
  • இதில் ஹம்சாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

குடகு:

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இந்த சிறுமி கடந்த 2006-ம் ஆண்டு தனது பெற்றோருடன் வசித்து வந்தாள். குடும்ப வறுமை காரணமாக அவர்கள் விவசாய நிலங்களில் கூலிவேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் அவர்கள் குடும்பத்துடன் குடகு மாவட்டம் மடிகேரி தாலுகா பாகமண்டலா அருகே உள்ள அய்யங்கேரி கிராமத்தில் கடந்த 2006-ம் ஆண்டு வசித்து வந்தனர்.

அப்போது இவர்களை அணுகிய கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஹம்சா என்பவர், தங்கள் வீட்டு வேலைக்கு ஒரு பெண் தேவைப்படுவதாகவும், உங்களது மகளை என்னுடைய வீட்டில் வேலை செய்ய அனுப்பினால் உரிய சம்பளம் கொடுப்பதாகவும் சிறுமியின் தந்தையிடம் கூறினார். அவர் கூறியதை நம்பிய சிறுமியின் தந்தை, தனது மகளை ஹம்சாவுடன் அனுப்பி வைத்தார்.

அதன்பிறகு அவரால் தனது மகளை தொடர்பு கொள்ள முடியவில்லை. தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேச முயன்றபோதும் முடியாமல் போனது.

இவ்வாறாக 5 ஆண்டுகள் கழிந்த நிலையில் தங்களது மகள் வேலை பார்த்தது போதும் என்றும், அவளை திருப்பி அனுப்பி விடுமாறும் ஹம்சாவிடம் சிறுமியின் தந்தை கேட்டுள்ளார். அப்போது அவருக்கு சரியான முறையில் பதில் அளிக்காத ஹம்சா, அதன்பிறகு சிறுமி குறித்து தகவலும் தெரிவிக்காமல், சிறுமியின் பெற்றோரை மிரட்டி வந்தார்.

இதையடுத்து அவர்கள் மடிகேரியில் உள்ள முஸ்லிம் அமைப்பினரை நாடினர். அவர்கள் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமி, கோவாவில் உள்ள ஹம்சாவின் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டது தெரியவந்தது. அதையடுத்து இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் இதுகுறித்து காசர்கோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியை ஹம்சாவும், அவரது மைத்துனர் அப்துல்லாவும் சேர்ந்து தொடர்ந்து கற்பழித்து வந்ததும், இதனால் கர்ப்பிணியான சிறுமியை அவர்கள் 2 பேரும் சேர்ந்து கொன்று உடலை துண்டு, துண்டாக வெட்டி கோவாவில் புதிதாக கட்டப்பட்ட வீட்டின் தூண்களுக்கு அடியில் உடல் பாகங்களை போட்டு புதைத்ததும் தெரியவந்தது.

மேலும் அவர்களுக்கு ஹம்சாவின் மனைவி மைமூனா உள்பட 3 பேர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. அதையடுத்து போலீசார் ஹம்சா, அவரது மனைவி மைமூனா, மைத்துனர் அப்துல்லா உள்பட 5 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை காசர்கோடு மாவட்ட கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கில் முக்கிய குற்றவாளியான ஹம்சாவுக்கு மரண தண்டனையும், அவரது மனைவி மைமூனா, மைத்துனர் அப்துல்லா ஆகிய 2 பேருக்கும் தலா 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மற்ற 2 பேரும் அரசு தரப்பு சாட்சிகள் ஆனதால் அவர்கள் விடுவிக்கப் பட்டனர். பின்னர் இந்த தீர்ப்பை எதிர்த்து ஹம்சா கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட்டு ஹம்சாவின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. இந்த சம்பவம் கடந்த 2015-ம் ஆண்டு நடந்தது.

இருப்பினும் கோவாவில் உள்ள வீட்டை இடித்து அதில் இருந்து கைப்பற்றப்பட்ட சிறுமியின் எலும்புக்கூடுகளை போலீசார் தடய அறிவியல் பிரிவிலேயே வைத்திருந்தனர். இந்த நிலையில் மகளின் எலும்புகளை தங்களிடம் தந்துவிடும்படி கோரி கேரள ஐகோர்ட்டில் சிறுமியின் தந்தை வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட்டு கடந்த 6-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில் சிறுமியின் எலும்புகளை அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி உத்தரவிடப்பட்டது. அதையடுத்து சிறுமியின் எலும்புகள் அவளது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்த எலும்புகளை மடிகேரிக்கு கொண்டு வந்த சிறுமியின் பெற்றோர், அங்குள்ள பழைய மசூதி அருகே அமைந்திருக்கும் சுடுகாட்டில் முஸ்லிம் மத வழக்கப்படி அடக்கம் செய்தனர். இதன்மூலம் சிறுமியின் ஆன்மா 18 ஆண்டுகளுக்கு பிறகு சாந்தி அடைந்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News