இந்தியா
null

எனது கேரக்டரை தவறாக சித்தரித்தார்கள் - மவுனம் களைத்த ஸ்வாதி மலிவால்

Published On 2024-05-16 16:45 GMT   |   Update On 2024-05-16 17:19 GMT
  • ஆம் ஆத்மி கட்சி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
  • எனது கேரக்டரை தவறாக சித்தரிக்க முயற்சித்தவர்கள், பிற கட்சிகளின் பேச்சை கேட்டு செயல்படுகிறேன் என்று கூறியவர்களையும் கடவுள் மகிழ்ச்சியாக வைத்திருக்கட்டும்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் வைத்து அவரது தனிச் செயலாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்ட ஸ்வாதி மலிவாலிடம் இன்று (மே 16) போலீசாளர் அவரது இல்லத்துக்கு சென்று 4 மணி நேரம் வாக்குமூலம் பெற்றனர். அப்போது ஸ்வாதி மலிவால் எழுத்துபூர்வமாக போலீசிடம் புகார் அளித்ததாக தெரிகிறது. இதனையடுத்து விரைவில் எப்ஐஆர் பதியப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே நாளை தேசிய மகளிர் ஆணையத்தின் முன் ஆஜராக கோரி பிபவ் குமாருக்கு சம்மன் அனுப்பபட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தொடக்கத்திலிருந்தே டெல்லி பாஜக தீவிரமாக விமர்சனங்களை முனைவைத்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், போலீசிடம் வாக்குமூலம் அளித்த பின் ஸ்வாதிக்கு மலிவால் தனது X தள பக்கத்தில் "எனக்கு நடந்தது மிகவும் மோசமானது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன். கடந்த சில நாட்களாக எனக்கு மிகவும் கடினமானதாக இருந்தது. எனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி.

எனது கேரக்டரை தவறாக சித்தரிக்க முயற்சித்தவர்கள், பிற கட்சிகளின் பேச்சை கேட்டு செயல்படுகிறேன் என்று கூறியவர்களையும் கடவுள் மகிழ்ச்சியாக வைத்திருக்கட்டும். நாட்டில் இப்போது முக்கியமானது தேர்தலே அன்றி நான் இல்லை. நாட்டின் பிரச்சினையே இப்போது முக்கியம். குறிப்பாக பாஜக இதை வைத்து அரசியல் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News