இந்தியா
குடியரசுத் துணைத் தலைவருக்கு நெஞ்சு வலி.. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
- அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- தன்கரை பார்க்க ஜேபி நட்டா விரைத்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 73 வயதான தன்கருக்கு இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென நெஞ்சுவலியும், உடல் அசைவுகர்யமும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது உடல்நிலை தற்போதைக்கு சீராக உள்ளதாகவும் அவரை கண்காணித்து வருகிறோம் என்றும் எய்ம்ஸ் மருத்துவமனை கார்டியாலஜி துறை தலைவர் டாக்டர் ராஜீவ் நாரங் தெரிவித்துள்ளார்.
சிகிச்சை பெற்றுவரும் தன்கரை பார்க்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா விரைத்துள்ளார்.