இந்தியா

ஓடும் ரெயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிய பெண் - சூப்பர் மேனாக மாறிய காவலர் - திக் திக் வீடியோ!

Published On 2025-03-09 12:07 IST   |   Update On 2025-03-09 12:07:00 IST
  • சமநிலையை இழந்து ரெயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கிக் கொண்டார்.
  • ஓடி வந்து வெளியே இழுத்து அவரை காப்பாற்றினார்.

ஓடும் ரெயிலில் இருந்து இறங்க முயன்றபோது தவறி விழுந்த பெண் பயணியை ரெயில்வே காவலர் ஒருவர் காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் மும்பையில் உள்ள போரிவலி ரெயில் நிலையத்தில் அந்தப் பெண் நகரும் ரெயிலில் இருந்து இறங்க முயன்றபோது சமநிலையை இழந்து ரெயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கிக் கொண்டார்.

நடைமேடையில் நின்று கொண்டிருந்த ரெயில்வே காவலர் விரைவாக அப்பெண்ணை நோக்கி ஓடி வந்து வெளியே இழுத்து அவரை காப்பாற்றினார். இது அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது.

இதை இன்று தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தலத்தில் பகிர்ந்துள்ள ரெயில்வே அமைச்சகம் நகரும் ரெயிலில் ஏறவோ, இறங்கவோ கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. 

Tags:    

Similar News