இந்தியா

சோதனை செய்ய வந்த ஊர்க்காவல் படை வீரரை காரில் இழுத்துச் சென்ற டிரைவர்

Published On 2024-11-09 07:37 GMT   |   Update On 2024-11-09 07:38 GMT
  • மாணவர் ஓட்டிச் சென்ற கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.
  • போலீசார் மாணவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர்.

தெலுங்கானா மாநிலம் பஞ்சகுட்டா போலீஸ் நிலையத்தை சேர்ந்த போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆஞ்சநேயலு, ஊர்க்காவல் படை வீரர் ரமேஷ் ஆகியோர் நாகார்ஜுன சர்க்கிள் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஐதராபாத்தை சேர்ந்த சையது மஜுதீன் நசீர் (வயது 20) என்ற மாணவர் தனது காரில் கல்லூரிக்கு சென்று கொண்டு இருந்தார். அவரது காரில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.

இதனைக் கண்ட சப்-இன்ஸ்பெக்டர் ஆஞ்சநேயலூ, ஊர்காவல் படை வீரர் ரமேஷ் ஆகியோர் காரை நிறுத்துமாறு சைகை செய்தனர்.

மாணவர் காரை நிறுத்தாமல் வந்தார். இதனால் ஊர்க்காவல் படை வீரர் ரமேஷ் காரின் பேனட்டை பிடித்தார். அப்போது மாணவர் காரை வேகமாக ஓட்டினார். ரமேஷ் காருக்கு முன் பகுதியில் தொங்கியபடி சென்றார்.

மேலும் கத்தி கூச்சலிட்டார். மாணவர் ஓட்டிச் சென்ற கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட போலீசார் காரை மடக்கி ரமேசை மீட்டனர். போலீசார் மாணவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர்.

காரில் ஊர்க்காவல் படை வீரர் இழுத்து செல்லப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

Tags:    

Similar News