பெண்களே உஷார்.... ரசாயன போலி மருதாணி கூம்புகள் தயாரிப்பு: உடல் நலத்தை பாதிக்கும் என எச்சரிக்கை
- அனுமதியின்றி தயார் செய்யப்படும் அழகு சாதன பொருட்களில் தரம் குறைவாக இருக்கலாம்.
- போலி மருதாணி கூம்புகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெண்கள் தற்போது அதிகளவில் மருதாணி கூம்புகளை பயன்படுத்தி வருகின்றனர். வீட்டில் நடக்கும் விசேஷங்கள் முதல் விழா காலங்களில் சிறுமிகள் முதல் பெண்கள் வரை அனைவராலும் தவிர்க்க முடியாததாக மருதாணி வைக்கும் பழக்கம் வந்துவிட்டது.
அந்த காலத்தில் வீட்டில் மருதாணி இலையை அரைத்து மருதாணி வைத்து அலங்கரித்தனர்.
ஆனால் தற்போது மருதாணி கூம்புகள் அறிமுகமான பிறகு விதவிதமான வகைகளில் மருதாணி கைகளில் வைக்கப்படுகிறது.600-க்கும் மேற்பட்ட மருதாணி வடிவமைப்புகள் கண்டு பிடிக்க ப்பட்டுள்ளன.
போலியான மருதாணி கூம்பு களால் உடல்ந லத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்து ள்ளனர்.***திருப்பதி, ஜன.11-
மருதாணி( மெஹந்தி)கோன் அதிகளவில் விற்பனைக்கு வருகின்றன. உண்மையான மருதாணி இலையை அரைத்து மட்டுமே இந்த மருதாணி கோன் உற்பத்தி செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
ஆனால் அதனை மீறி தெலுங்கானா மாநிலத்தில் மெஹந்தி நிறுவனம் ஒன்று போலியாக மருதாணி கோன்களை தயாரித்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள மெகதி பட்டினத்தில் உள்ள ஒரு மருதாணி கூம்பு தயாரி க்கும் தொழிற்சாலையில் போலியாக மருதாணி கூம்புகள் தயாரிப்பதாக தெலுங்கானா மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் நேற்று அந்த நிறுவனத்தில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அங்கிருந்த மருதாணி கூம்புகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது அந்த மருதாணி கூம்புகள் பிக்ரமிக் அமிலம் என்ற செயற்கை சாயத்தை பயன்படுத்தி போலியாக தயாரிப்பது தெரிய வந்தது. மேலும் இந்த நிறுவனம் உரிமம் இல்லாமல் இயங்கியது கண்டு பிடிக்க பட்டது.
அந்த நிறுவனத்தில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள மருதாணி கூம்புகளை பறிமுதல் செய்தனர். அதன் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெலுங்கானா மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது குறித்து அவர்கள் கூறுகையில்
அனுமதியின்றி தயார் செய்யப்படும் அழகு சாதன பொருட்களில் தரம் குறைவாக இருக்கலாம்.
இது போன்ற அழகு சாதன பொருட்களில் பொது சுகாதாரத்தில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது.
தற்போது பறிமுதல் செய்யப்பட்ட மருதாணி கூம்புகள் பிக்ரமிக் அமிலம் என்ற செயற்கை சாயத்தை பயன்படுத்தி தயாரித்துள்ளனர்.
இந்த அமிலம் வெடி பொருட்கள் தயாரிப்பதற்கும் மருத்து வத்துறையில் சில மருந்துகள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்த வகை மருதாணி கையில் வைப்பதால் சாப்பிடும் போது உணவில் கலந்து உடலில் கலந்து விடும்.இது உடல் நலத்தை பாதிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
போலி மருதாணி கூம்புகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.