இந்தியா

தெலுங்கானாவிற்கு தண்ணீர் திறந்து விடுவோம்- கர்நாடகா அதிகாரிகள் உறுதி

Published On 2024-03-22 05:41 GMT   |   Update On 2024-03-22 05:41 GMT
  • கிருஷ்ணா நதியில் குடிநீர் தேவைக்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விட வேண்டும் என அந்த மாநில அரசு வலியுறுத்தியது.
  • காவிரி படுகையில் உள்ள பெங்களூரில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மற்றும் ஜெகந்தி ராபாத் நகரப் பகுதிகளில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் இருந்து கிருஷ்ணா நதியில் குடிநீர் தேவைக்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விட வேண்டும் என அந்த மாநில அரசு வலியுறுத்தியது.

இதற்காக அமைச்சர்கள் அடங்கிய குழுவையும் பெங்களூருக்கு அனுப்ப திட்டமிட்டது. ஆனால் தேர்தல் விதிகள் அமலில் இருப்பதால் அதனை ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில் ஐதராபாத் மற்றும் செகந்திராபாத் நகரங்களின் குடிநீர் தேவைக்காக அவசரமாக தண்ணீர் திறந்து விடுவோம் என கர்நாடகா நீர்ப்பாசன செயலாளர் உறுதியளித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்:- காவிரி படுகையில் உள்ள பெங்களூரில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரியில் தற்போது தண்ணீர் திறந்து விட முடியாத சூழ்நிலை உள்ளது.

ஆனால் கிருஷ்ணா நதியில் தண்ணீர் திறந்து விடும் அளவிற்கு அணைகளில் இருப்பு உள்ளது. அவசர தேவைக்காக தெலுங்கானா மாநிலத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவோம் என தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இதன் காரணமாக இரு மாநிலங்களுக்கும் இடையே இணக்கமான சூழ்நிலை நிலவி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News