ஒட்டகத்தை துன்புறுத்தி நடனமாடிய இளம்பெண்
- ஒட்டகத்தின் மீது இளம்பெண் ஒருவர் ஏறி நடனமாடுகிறார்.
- ஒட்டகத்தை துன்புறுத்திய செயல் விலங்கு நல அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஒட்டகத்தை துன்புறுத்தி அதன் மீது ஏறி ஒரு இளம்பெண் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. அம்மாநிலத்தில் உள்ள அனுமன் நகரில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
அதில், வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், தெருவில் ஒரு கயிற்று கட்டில் உள்ளது. அதன் மீது ஒட்டகத்தை படுக்க வைத்து, அதன் இரு கால்களையும் கட்டி உள்ளனர். பின்னர் அந்த ஒட்டகத்தின் மீது இளம்பெண் ஒருவர் ஏறி நடனமாடுகிறார். பொழுதுபோக்கிற்காக இவ்வாறு நடனமாடியதாக கூறப்படுகிறது.
ஆனாலும் ஒட்டகத்தை துன்புறுத்திய இந்த செயல் விலங்கு நல அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. லட்சக்கணக்கான பார்வைகளை பெற்ற இந்த வீடியோவை பார்த்த பலரும் கடுமையான விமர்சனங்களை பதிவிட்டதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.