இந்தியா

நீர்வீழ்ச்சியை காண ஆபத்தான பயணம்- தடையை மீறிய சுற்றுலா பயணிகளுக்கு போலீசாரின் நூதன தண்டனை

Published On 2023-07-18 04:05 GMT   |   Update On 2023-07-18 04:05 GMT
  • தடையை மீறி சுற்றுலா பயணிகள் நீர் வீழ்ச்சியை காண சென்று கொண்டிருக்கிறார்கள்.
  • தடையை மீறிய சுற்றுலா பயணிகளிடம் கையை முன்பக்கம் நீட்டி கொண்டு உட்கார்ந்து எழும்பும் தண்டனை கொடுத்துள்ளனர்.

கோவா- கர்நாடகா எல்லையில் உள்ள துத்சாகர் பகுதியில் மழைக்காலங்களில் தற்காலிக நீர்வீழ்ச்சிகள் உருவாவது வழக்கம். இதை காண சுற்றுலா பயணிகள் அதிகளவு வருவதோடு மலை ஏற்றத்திலும் ஈடுபடுவார்கள். இது சில நேரங்களில் ஆபத்தாக முடியும் என்பதால் கோவா அரசு மலை ஏற்றத்திற்கு தடை விதித்துள்ளது. ஆனாலும் தடையை மீறி சுற்றுலா பயணிகள் நீர் வீழ்ச்சியை காண சென்று கொண்டிருக்கிறார்கள். துத்சாகர் ரெயில் நிலையத்தில் அதிக ரெயில்கள் நிற்காது என்பதால் சுற்றுலா பயணிகள் தெற்கு கோவாவில் உள்ள காலேல் ரெயில் நிலையத்தில் இறங்கி தண்டவாளம் வழியாக நடந்தே துத்சாகருக்கு செல்வது வழக்கம். தற்போது தடை விதிக்கப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் சிலர் அதனை மீறி தண்டவாளம் வழியாக நடந்து சென்றுள்ளனர்.

இதை பார்த்த ரெயில்வே போலீசாரும், வனத்துறையினரும், தடையை மீறிய சுற்றுலா பயணிகளுக்கு நூதன தண்டனை கொடுத்த காட்சிகள் இனையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தடையை மீறிய சுற்றுலா பயணிகளிடம் கையை முன்பக்கம் நீட்டி கொண்டு உட்கார்ந்து எழும்பும் தண்டனை கொடுத்துள்ளனர். இதனை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட அது வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News