இந்தியா

போக்குவரத்து நெரிசலில் சிக்கிய போதும் தேர்வுக்கு படித்த ஊழியர்

Published On 2024-03-31 09:16 GMT   |   Update On 2024-03-31 09:16 GMT
  • வீடியோ 62 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளையும், 1500-க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் குவித்துள்ளது.
  • சில பயனர்கள் தங்களது பதிவில், சாலைகளில் செல்லும்போது இதுபோன்ற செயல்கள் ஆபத்தை ஏற்படுத்தும் என பதிவிட்டுள்ளனர்.

அரசு தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் பலரும் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் படிப்பதை காணமுடியும். அந்த வகையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய நேரத்திலும் ஜோமோட்டோ ஊழியர் ஒருவர் தேர்வுக்கு படிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

'எக்ஸ்' தளத்தில் ஆயுஸ் சங்கி என்ற பயனர் பகிர்ந்த அந்த வீடியோவில், பரபரப்பான சாலையில் போக்குவரத்து நெரிசலில் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் நிற்கும் காட்சிகளுடன் தொடங்குகிறது. அப்போது அந்த வாலிபர் தனது செல்போனில் யூனைடெட் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ( யு.பி.எஸ்.சி.) விரிவுரைகளை பார்க்கும் காட்சிகள் உள்ளது. இந்த வீடியோவை பார்த்த பிறகு, கடினமாக படிக்க உங்களுக்கு வேறு உந்துதல் இருப்பதாக நான் நினைக்கவில்லை என்று ஆயுஸ் சங்கி பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ 62 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளையும், 1500-க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் குவித்துள்ளது. பயனர்கள் பலரும் ஜோமோட்டோ ஊழியரின் ஆர்வத்தை பாராட்டி பதிவிட்டனர். சிலர், இந்த வீடியோ மிகவும் ஊக்கமளிக்கிறது. இது முன்பை விட கடினமாக உழைக்க வேண்டும் என்ற உந்துதலை தருகிறது என பதிவிட்டுள்ளனர். அதேநேரம் சில பயனர்கள் தங்களது பதிவில், சாலைகளில் செல்லும்போது இதுபோன்ற செயல்கள் ஆபத்தை ஏற்படுத்தும் என பதிவிட்டுள்ளனர்.

Tags:    

Similar News