செய்திகள்

உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய அணியின் துணை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமனம்

Published On 2019-02-08 11:20 GMT   |   Update On 2019-02-08 11:20 GMT
உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியின் துணை பயிற்சியாளராக முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். #WorldCup2019
50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற மே மாதம் 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் தங்களை தயார் செய்து வருகிறது. ஏப்ரல் மாதம் மத்தியில் ஒவ்வொரு அணியினரும் தங்களது அணியில் இடம்பிடித்துள்ள 15 வீரர்கள் கொண்ட பட்டியலை ஐசிசி-க்கு அனுப்ப வேண்டும்.

இதனால் வருகின்றன தொடர்களை ஒவ்வொரு அணிகளும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஆஸ்திரேலியா இங்கிலாந்து சென்று உலகக்கோப்பை தொடரில் விளையாடிய உடன் ஆஷஸ் தொடரில் விளையாட இருக்கிறது.

ஆஸ்திரேலியாவிற்கு உலகக்கோப்பை தொடர் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் ஆஷஸ் தொடரும் முக்கியம். இதனால் இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடர் முடிந்த உடன், ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் பயிற்சியாளரான கிரேம் கிக்கை, ஆஷஸ் தொடருக்கு வீரர்களை தயார் செய்வதற்கான பணிகளில் ஈடுபடுத்த இருக்கிறது.

இதனால் ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்கை துணை பயிற்சியாளராக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. ரிக்கி பாண்டிங் தலைமையில் ஆஸ்திரேலியா 2003 மற்றும் 2007-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News