காதலே.. காதலே..! தங்கம் வென்ற வீராங்கனையிடம் காதலை சொன்ன சக வீரர்- பாரிஸ் ஒலிம்பிக்கில் சுவாரஸ்யம்
- சீனாவின் ஹியாங் யா கியாங்க் – ஜேங் சிவேய் ஜோடியும், கொரியாவின் சியோ சியூங் ஜே – சா யூ ஜூங் ஜோடியும் மோதினர்.
- காதல் ஜோடியை கண்ட ரசிகர்கள் அனைவரும் கைதட்டி தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
பாரிஸ் ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று கலப்பு இரட்டையர் பிரிவு இறுதியில் சீனாவின் ஹியாங் யா கியாங்க் – ஜேங் சிவேய் ஜோடியும், கொரியாவின் சியோ சியூங் ஜே – சா யூ ஜூங் ஜோடியும் மோதினர்.
போட்டியின் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய சீன ஜோடி கொரிய ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது.
தங்கப்பதக்கத்தை வென்ற உற்சாகத்தில் இருந்த சீன வீராங்கனை ஹியாங் யா கியாங்யிடம் எதிர்பாராத நேரத்தில் அவருடன் விளையாடும் சக வீரரான லியூ யூசேன் தனது காதலை வெளிப்படுத்தினார்.
அப்போது, லியூ தனது கையில் வைத்திருந்த வைர மோதிரத்தை காட்டி வீராங்கனை ஹியாங் யா கியாங்க் முன்பு மண்டியிட்டு "என்னை திருமணம் செய்து கொள்வாயா?" என்று கேட்டார்.
இதை சற்றும் எதிர்பாராத ஹியாங் ஆனந்த கண்ணீரில் தத்தளித்தார்.
பின்னர், லியூ யூசேனின் காதலை ஏற்பதாக தலையை அசைத்த ஹியாங் யா கியாங்க் மோதிரத்தை அணிவித்து விடுமாறு தனது விரலை நீட்டினார். லியூ யூசேன் மோதிரத்தை அணிவித்தார்.
இந்த காதல் ஜோடியை கண்ட ரசிகர்கள் அனைவரும் கைதட்டி தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். பிரோபோஸ் செய்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.