விளையாட்டு
பாரீஸ் ஒலிம்பிக்: பேட்மிண்டனில் தங்கம் வென்றார் தென்கொரிய வீராங்கனை
- வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென் இன்று மோதுகிறார்.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் சீன வீராங்கனை ஜி பிங் ஜியாவ் தோல்வி அடைந்தார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.
இந்நிலையில், பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் தென் கொரிய வீராங்கனை அன் செ யங், சீன வீராங்கனை ஜி பிங் ஜியாவ் உடன் மோதினார்.
இதில் தென்கொரிய வீராங்கனை 21-13, 21-16 என்ற செட் கணக்கில் வென்று தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். தோல்வி அடைந்த சீன வீராங்கனை வெள்ளிப் பதக்கம் வென்றார்.