விளையாட்டு

2027 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்றது சீனா

Published On 2024-02-29 04:13 GMT   |   Update On 2024-02-29 04:13 GMT
  • உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் ஏலத்தில் இருந்து இத்தாலி பின்வாங்கியது.
  • சீனா விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், உலக தடகள கவுன்சில் அதற்கு வாய்ப்பு அளித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படும். 2025-ல் ஜப்பான் உலக சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துகிறது. ஜப்பானின் டோக்கியோ நகரில் நடத்தப்படுகிறது.

2027-ம் போட்டியை நடத்த இத்தாலி, சீனா விருப்பம் தெரிவித்திருந்தன. இத்தாலியில் உலக சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற அதிக வாய்ப்பு இருந்தது. ஆனால், விளையாட்டு போட்டிகளை நடத்த அரசு 92 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான தொகையை ஒதுக்க உத்தரவாதம் அளிக்க மறுத்துவிட்டது. இதனால் இத்தாலி போட்டியை நடத்துவதற்கான விண்ணப்பத்தை திரும்பப் பெற்றது.

இதனால் சீனா போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்றுள்ளது. சீனாவின் பீஜிங் நகரில் 2027 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறும். தடகள போட்டிகள் அனைத்தும் இந்த சாம்பியன்ஷிப்பிற்குள் அடங்கும்.

உலக தடகள கவுன்சில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய வணிக மார்க்கெட்டான சீனாவில் விளையாட்டு மற்றும் ரசிகர்கள் வளர்ச்சிக்கு இது வாய்ப்பாக அமையும் எனத் தெரிவித்துள்ளது.

கடந்த முறை ஹங்கேரியின் புத்தாபெஸ்ட் நகரில் உலக சாம்பியன்ஷிப் நடைபெற்றது. அதற்கு முன்னதாக அமெரிக்காவில் உள்ள ஒரேகானில் நடைபெற்றது.

Tags:    

Similar News