விளையாட்டு
பாரீஸ் ஒலிம்பிக்: வில்வித்தையில் பஜன் கவுர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்
- ரவுண்டு ஆப் 32 சுற்றுக்கு இந்திய வீராங்கனை பஜன் கவுர் முன்னேறினார்.
- மற்றொரு வீராங்கனையான அங்கிதா பகத் தோல்வி அடைந்தார்.
பாரீஸ்:
பாரீஸ் ஒலிம்பிக்கின் வில்வித்தை போட்டியில் இந்தியா, இந்தோனேசியா அணிகள் மோதின. இந்தியாவின் சார்பில் பஜன் கவுர் கலந்து கொண்டார்.
முதல் செட்டில் 1-1 என சமனிலை வகித்தது. 2வது செட்டில் 3-1 என இந்தோனேசிய வீராங்கனை முன்னிலை வகித்தார். 3வது செட்டில் 3-3 என சமனிலை வகித்தனர். 4வது செட்டில் பஜன் கவுர் 5-3 என முன்னிலை பெற்றார். 5வது செட்டில் 7-3 என கைப்பற்றி வென்றார்.
இதன்மூலம் ரவுண்டு ஆப் 32 சுற்றுக்கு இந்திய வீராங்கனை பஜன் கவுர் முன்னேறி அசத்தினார்.
மற்றொரு வீராங்கனையான அங்கிதா பகத் தோல்வி அடைந்தார்/