விளையாட்டு

வில்வித்தை உலகக் கோப்பை: இந்திய பெண்கள் அணி தங்கம் வென்று சாதனை

Published On 2024-06-22 09:09 GMT   |   Update On 2024-06-22 09:09 GMT
  • எஸ்டோனியா அணியை 232-229 என வீழ்த்தி தங்கம் வென்றது.
  • ஏற்கனவே 2 முறை தங்கம் வென்ற நிலையில், 3-வது முறையாக தங்கம் வென்றது.

துருக்கி:

துருக்கியில் வில்வித்தை உலகக் கோப்பை (ஸ்டேஜ்-3) நடைபெற்றது. இதில் காம்பவுண்ட் பிரிவில் 3 பேர் கொண்ட இந்திய பெண்கள் அணி எஸ்டோனியா அணியை 232-229 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது.

உலகின் நம்பர் ஒன் காம்பவுண்ட் பிரிவு பெண்கள் அணியாக திகழும் ஜோதி சுரேகா வென்னம், பர்னீத் கவுர், அதிதி ஸ்வாமி ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.

ஜோதி சுரேகா வென்னம், பர்னீத் கவுர், அதிதி ஸ்வாமி உலகக் கோப்பை ஸ்டேஜ்-1 மற்றும் ஸ்டேஜ் 2 பிரிவுகளிலும் தங்கம் வென்றனர். கடந்த ஆண்டு இறுதியில் பாரிசில் நடந்த போட்டியிலும் தங்கம் வென்று அசத்தியிருந்தனர்.

Tags:    

Similar News