கிரிக்கெட் (Cricket)

வீடியோ: கொஞ்சம் மசாலா சேர்த்துக்கோங்க பாய்.. ஆஸி., பிரதமரிடம் FUN செய்த விராட்

Published On 2024-11-28 10:10 GMT   |   Update On 2024-11-28 10:10 GMT
  • ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6-ந் தேதி தொடங்குகிறது.
  • 2-வது போட்டிக்கு முன்னர் இந்திய அணி 2 நாள் பயிற்சி போட்டியில் விளையாடுகிறது.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகுக்கிறது. இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 6-ந் தேதி அடிலெய்டுவில் தொடங்குகிறது. இந்த போட்டி பகல் இரவு போட்டியாக நடைபெறுகிறது.

இந்த போட்டிக்கு முன்னர் 2-நாள் கொண்ட பயிற்சி போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. இதற்காக இந்திய அணி கான்பெராவுக்கு சென்றுள்ளது.

இந்நிலையில் ரோகித் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸை நேரில் சந்தித்தினர். அப்போது கேப்டன் ரோகித் சர்மா இந்திய வீரர்களை பிரதமருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். 

முதலாவதாக பும்ராவை அறிமுகப்படுத்தினார். அதை போல அடுத்த இருந்த விராட் கோலியை அறிமுகப்படுத்த ரோகித் முயற்சித்தார். உடனே இவரை தெரியாமல் இருக்க முடியுமா என்பது போல பிரதமர், சிரித்தப்படி கோலியிடம் பேசி மகிழ்ந்தார்.

அப்போது, பெர்த்தில் உங்களது சதம் சூப்பர். ஆனால் அது எங்களுக்கு பெரிய அளவில் பாதிக்கவில்லை. அதற்கு விராட், கொஞ்சமாக மசாலா சேர்க்க வேண்டும் என கூறினார். உடனே பிரதமர் சிரித்தபடி சரி நீங்கள் இந்தியர்கள் ஆச்சே என கூறி அடுத்த வீரரை சந்தித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



Tags:    

Similar News