டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த ரூட்- ப்ரூக்
- 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணியானது 6 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை எடுத்தது.
- இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 317 ரன்களும், ஜோ ரூட் 262 ரன்களையும் சேர்த்தனர்.
பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது முதல் இன்னிங்சில் 556 ரன்களைக் குவித்தது.
இதனையடுத்து இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 823 ரன்களை குவித்து இன்னிங்சை டிக்ளர் செய்ததுடன், முதல் இன்னிங்சில் 267 ரன்கள் முன்னிலையும் பெற்றுள்ளது.
இதனையடுத்து 2-வது இன்னிங்சைத் தொடங்கியுள்ள பாகிஸ்தான் அணியானது அடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இதனால் 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணியானது 6 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது.
முன்னதாக இந்த போட்டியில் ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 450 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இதன்மூலம் இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 317 ரன்களும், ஜோ ரூட் 262 ரன்களையும் சேர்த்தனர்.
இதன் வாயிலாக பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட் இன்னிங்சில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடியாகவும் அவர்கள் உலக சாதனை படைத்துள்ளனர். இதற்கு முன் 1958-ம் ஆண்டு கிங்ஸ்டன் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கேரி சோபர்ஸ் - கோன்ரட் ஹண்டே 446 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாக இருந்தது. அந்த சாதனையை இந்த ஜோடி முறியடித்துள்ளது.