கிரிக்கெட் (Cricket)

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாம்பியன்ஸ் டிராபி கோப்பை பயணம்: பிசிசிஐ கடும் எதிர்ப்பால் திட்டம் மாற்றம்

Published On 2024-11-16 11:47 GMT   |   Update On 2024-11-16 11:47 GMT
  • ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கான பயணம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
  • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் காஷ்மீர் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் பிசிசிஐ கடும் எதிர்ப்பு.

பாகிஸ்தானில் அடுத்த வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடரை விளம்பரப்படுத்துவதற்கான ஐசிசி கோப்பை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லப்படும்.

அந்த வகையில் இன்று சாம்பியன்ஸ் டிராபி பயணம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த கோப்பை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளான ஸ்கார்டு, ஹன்சா, முசாபர்பாத் போன்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுவதாக இருந்தது.

இதற்கு பிசிசிஐ கடும் ஆட்சேபனை தெரிவித்தது. இதனால் அப்பகுதிக்கு எடுத்துச் செல்லப்படாது என ஐசிசி தெரிவித்துள்ளது.

டாக்சிலா, கான்பூர், அபோதாபாத், முர்ரீ, நதியா கலி, கராச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 26 முதல் 28-ந்தேதி வரை ஆப்கானிஸ்தானிலும், டிசம்பர் 10 முதல் 13-ந்தேதி வரை வங்கதேசத்திலும், டிசம்பர் 15 முதல் 22-ந்தேதி வரை தென்ஆப்பிரிக்காவிலும், டிசம்பர் 25-ந்தேதி முதல் ஜனவரி 5-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவிலும், ஜனவரி 6-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நியூசிலாந்திலும், ஜனவரி 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை இங்கிலாந்திலும், ஜனவரி 15-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை இந்தியாவிலும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பை எடுத்துச் செல்லப்பட இருக்கிறது.

Tags:    

Similar News