முகமது ஷமி 7 விக்கெட்: ரஞ்சி டிராபி போட்டியில் பெங்கால் அணி த்ரில் வெற்றி
- முதல் இன்னிங்சில் 19 ஓவர்களில் 54 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.
- 2-வது இன்னிங்சில் முகமது ஷமி 24.2 ஓவரில் 102 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
ரஞ்சி கோப்பைக்கான லீக் ஆட்டம் ஒன்றிலா் மத்திய பிரதேசம்- பெங்கால் அணிகள் மோதின. காயம் காரணமாக நீண்ட நாட்களாக விளையாடாமல் இருந்த முகமது ஷமி பெங்கால் அணிக்காக களம் இறங்கினார்.
முதலில் பேட்டிங் செய்த பெங்கால் அணி 228 ரன்னில் ஆல்அவுட் ஆனது. அதன்பின் மத்திய பிரதேசம் 167 ரன்னில் சுருண்டது. முகமது ஷமி சிறப்பாக பந்து வீசி 19 ஓவர்களில் 54 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.
பின்னர் 2-வது இன்னிங்சில் பெங்கால் 276 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் மத்திய பிரதேசம் அணிக்கு 337 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தொடக்க வீரர்கள் சேனாதிபதி (50), ஹிமான்சு மந்த்ரி (44), ரஜத் படிதார் (32) நல்ல தொடக்கம் அமைத்தனர்.
5-வது வீரரான களம் இறங்கிய சுப்மம் சர்மா 61 ரன்களும், 7-வது வீரராக களம் இறங்கிய வெங்கடேஷ் அய்யர் 53 ரன்களும் அடிக்க மத்திய பிரதேசம் வெற்றியை நோக்கி சென்றது. இறுதியில் அணி 326 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் பெங்கால் அணி 11 ரன்னில் த்ரில் வெற்றி பெற்றது. முகமது ஷமி 24.2 ஓவரில் 102 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
இரண்டு இன்னிங்சிலும் 7 விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.