கிரிக்கெட் (Cricket)

ஐபிஎல் 2025 மெகா ஏலம்: 182 வீரர்களுக்காக ரூ. 639.15 கோடி செலவழித்த 10 அணிகள்

Published On 2024-11-26 03:06 GMT   |   Update On 2024-11-26 03:06 GMT
  • அதிக பட்சமாக ரிஷப் பண்டை எல்.எஸ்.ஜி. அணி ரூ. 27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
  • வைபவ் சூர்யவன்ஷி (13 வயது) ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட இளம் வீரர் ஆனார்.

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி வீரர்கள் தக்கவைப்பு, விடுவிப்பு ஆகியவை ஏற்கனவே முடிந்து விட்டன. 10 அணிகளும் மொத்தம் 46 வீரர்களை தக்க வைத்துள்ளன.

இதனை தொடர்ந்து ஐ.பி.எல். வீரர்கள் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் 2 நாட்கள் நடைபெற்று முடிந்தது. 2 நாட்களில் 182 வீரர்களுக்காக 639.15 கோடியை 10 அணி உரிமையாளர்கள் செலவிட்டுள்ளனர்.

அதிக பட்சமாக ரிஷப் பண்ட் (ரூ. 27 கோடி, எல்.எஸ்.ஜி.), ஷ்ரேயாஸ் அய்யர் (ரூ. 26.75 கோடி, பஞ்சாப்) மற்றும் வெங்கடேஷ் ஐயர் (ரூ. 23.75 கோடி, கே.கே.ஆர்) ஆகிய மூவரும் அதிக விலைக்கு வாங்கப்பட்டவர்கள். 13 வயதான வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட இளம் வீரர் ஆனார். ராஜஸ்தான் அணி அவரை ரூ 1.10 கோடிக்கு வாங்கியது.

சுழற்பந்து வீச்சாளர்களில் அதிக விலைக்கு யுஸ்வேந்திர சாஹல் ஏலம் போனார். ரூ. 18 கோடிக்கு பஞ்சாப் அணி அவரை ஏலத்தில் எடுத்தது.

ஏலத்தின் 2-வது நாளில், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார் ரூ. 10.75 கோடிக்கு ஏலம் போனார். அவரை ஆர்சிபி தட்டி தூக்கியது. 

Tags:    

Similar News