ஐ.பி.எல்.(IPL)
Baasha Of Spin.. பாட்ஷாவாக மாறிய நூர் அகமது- வைரலாகும் வீடியோ

Baasha Of Spin.. பாட்ஷாவாக மாறிய நூர் அகமது- வைரலாகும் வீடியோ

Published On 2025-03-24 16:49 IST   |   Update On 2025-03-24 16:49:00 IST
  • 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
  • 4 விக்கெட்டுகளை வீழ்த்திய நூர் அகமது-க்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

சென்னை:

ஐ.பி.எல். தொடரில் சென்னையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தலா 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 155 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக திலக் வர்மா 31 ரன்கள் எடுத்தார்.

சென்னை தரப்பில் நூர் அகமது 4 விக்கெட்டும், கலீல் அகமது 3 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து 156 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை 19.1 ஓவரில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 158 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்திய நூர் அகமது-க்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஆட்டநாயகன் விருதுடன் நூர் அகமது குறித்து ஒரு வீடியோ ஒன்றை சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ளது. அதில் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தின் பிரபலமான டயலாக்கான நான் ஒரு தடவ சொன்னா நூரு தடவ சொன்ன மாதிரி என்ற டயலாக்கை நூர் அகமது பேசியுள்ளார். இது தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வீடியோவுக்கு Baasha of spin என தலைப்பிட்டுள்ளது. 

Tags:    

Similar News