
நான் ருதுராஜ் கெய்க்வாட்டின் ரிமோட் கண்ட்ரோல் அல்ல - தோனி ஓபன் டாக்
- நான் முடிந்த அளவுக்கு உங்களது முடிவுகளில் இருந்து விலகியே இருப்பேன் என்றேன்.
- வீரர்களை ருதுராஜ் மிகவும் அருமையாக கையாண்டார்.
மும்பைக்கு எதிரான நேற்றையப் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்ற நிலையில், சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட்டாலும், அணிக்கான முடிவுகளை தோனி எடுப்பதாக பரவலாக பேசப்பட்டது.
இந்த நிலையில், சிஎஸ்கே அணிக்கான முடிவுகளை ருதுராஜ் கெய்க்வாட்டின் பின்னணியில் இருந்து தான் எடுப்பதாக கூறப்படுவதை தோனி மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ருதுராஜ் கெய்க்வாட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து பல ஆண்டுகளாக பயணிக்கிறார். அவர் மிகவும் அமைதியானவர். அவரிடம் சிறந்த தலைமைப் பண்பு உள்ளது. அதன் காரணமாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்படுவதற்கு அவர் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டார்.
இந்த ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பு நான் ருதுராஜிடம் கூறியது என்னவென்றால், நான் ஒரு அறிவுரை கூறினால் அதனை நீங்கள் கண்டிப்பாக கேட்டு நடக்க வேண்டும் என அர்த்தம் கிடையாது. நான் முடிந்த அளவுக்கு உங்களது முடிவுகளில் இருந்து விலகியே இருப்பேன் என்றேன்.
கடந்த ஐபிஎல் தொடரின்போது, ருதுராஜ் கெய்க்வாட் எடுக்கும் முடிவுகளின் பின்னணியில் நான்தான் இருக்கிறேன் என பரவலாக பேசப்பட்டது. ஆனால், உண்மையில் 99 சதவிகித முடிவுகளை எடுத்தது அவர்தான். பந்துவீச்சில் மாற்றங்கள், ஃபீல்டிங்கில் மாற்றங்கள் போன்ற மிகவும் முக்கியமான முடிவுகளை அவர்தான் எடுத்தார். அவருக்கு நான் உதவியாக இருந்தேன். வீரர்களை ருதுராஜ் மிகவும் அருமையாக கையாண்டார்.
என தோனி கூறினார்.