
VIDEO: KKR Vs RCB போட்டியின் இடையே விராட் கோலியின் கால்களில் விழுந்த ரசிகர்
- KKR-க்கு எதிரான போட்டியில் கோலி 59 அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- ஆர்சிபி அணி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2025 சீசன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக ஆர்சிபி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய கோலி 59 அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இப்போட்டியின் 13 ஆவது ஓவரின் கோலி பேட்டிங் செய்துகொண்டிருக்கும்போது மைதானத்தில் அத்துமீறி நுழைந்த ரசிகர் ஒருவர் கோலியின் கால்களில் விழுந்தார். இதனால் போட்டி சில நிமிடங்கள் தடைபட்டது.
பின்னர் மைதானத்தின் பாதுகாப்பு ஊழியர்கள் அத்துமீறி நுழைந்த ரசிகரை மைதானத்தை விட்டு வெளியேற்றினர்.
விராட் கோலியின் கால்களில் ரசிகர் விழுவது இது முதல் முறையல்ல. 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது ஆஸ்திரேலிய ரசிகர் ஒருவர் மைதானத்தில் அத்துமீறி நுழைந்து விராட் கோலியை கட்டிப்பிடிக்க முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.