null
VIDEO: எம்.எஸ். தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை அடித்து பயிற்சி மேற்கொண்ட ரிஷப் பண்ட்
- மெகா ஏலத்தில் ரிஷப் பண்டை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
- 2025 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் தலைமையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி களமிறங்கவுள்ளது.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தாவை வீழ்த்தி முதல் வெற்றியை ஆர்சிபி பதிவு செய்தது.
இந்த ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் தலைமையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி களமிறங்கவுள்ளது.
முன்னதாக நடைபெற்று முடிந்த இந்த வீரர்கள் மெகா ஏலத்தில் இந்திய வீரர் ரிஷப் பண்டை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் எனும் சாதனையை ரிஷப் பண்ட் படைத்தார்.
ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது தங்களுடைய முதல் லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதற்காக 2 அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், ஐபிஎல் போட்டிக்கான பயிற்சியின்போது எம்.எஸ்.தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை அடித்து ரிஷப் பண்ட் பயிற்சி மேற்கொண்ட வீடியோவை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ஜெயிலர் படத்தின் அலப்பறை கிளப்புறோம் பாடல் பின்னணியில் ஒலிக்கப்பட்டது தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.