null
விராட் கோலி vs ஜோ ரூட்: டெஸ்ட் சாதனையை ஒப்பிட்டு இந்திய ரசிகர்களை சீண்டிய வாகன்
- டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி 20 சதங்கள் அடித்துள்ளார்.
- ஜோ ரூட் 32 சதங்கள் அடித்து அலைஸ்டர் குக் சாதனையை சமன் செய்துள்ளார்.
கிரிக்கெட்டில் இந்த தலைமையின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக இந்திய அணியின் விராட் கோலி, ஆஸ்திரேலிய அணியின் ஸ்மித், நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன், இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் ஆகியோர் பார்க்கப்படுகிறார்கள்.
இவர்களில் யார் சிறந்தவர்கள் என்ற விவாதம் ரசிகர்களுக்கு இடையில் மட்டுமல்ல, முன்னாள் வீரர்களுக்கு இடையிலும் ஏற்படுவதுண்டு.
இந்திய அணியின் விராட் கோலி டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். ஜோ ரூட் பெரும்பாலும் டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறது.
இந்திய நான்கு பேர்களில் ஒட்டுமொத்தமாக அதிக சதம் அடித்தவர் விராட் கோலி. ஆனால் டெஸ்ட் போட்டியில் அவர் மற்ற மூன்று பேர்களை விட சற்று குறைவாக உள்ளார்.
நேற்று முன்தினம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் சதம் விளாசினார். இதன்மூலம் அதிக சதம் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை அலைஸ்டர் குக் உடன் பகிர்ந்துள்ளார்.
இந்த நிலையில் டெஸ்ட் போட்டியில் விராட் கோலியை விட ஜோ ரூட் சிறந்தவர் என்பது போல் மைக்கேல் வாகன், இருவர்களுக்கும் இடையிலான ஒப்பிட்டை வெளிப்படுத்தி, "மார்னிங் இந்தியா" என இந்திய ரசிகர்களை சீண்டியுள்ளார்.
விராட் கோலியை விட 72 இன்னிங்ஸ்கள் அதிகமாக ஜோ ரூட் விளையாடியுள்ளார் என இந்திய ரசிகர் ஒருவர் பதில் அளித்துள்ளார். மேலும் இந்திய ரசிகர்கள் விராட் கோலிக்கு ஆதரவாக தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.