ஒரே ஆண்டில் அதிக முறை 200 ரன்கள்: சாதனை படைத்த இந்திய அணி
- முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 219 ரன்களை குவித்தது.
- அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 208 ரன்களை மட்டுமே எடுத்தது.
செஞ்சூரியன்:
தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான 3வது டி20 போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 219 ரன்களை குவித்தது. திலக் வர்மா அதிரடியாக ஆடி சதமடித்து 107 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அரை சதமடித்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து 220 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 208 ரன்களை எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த ஆண்டில் இந்திய அணி 8-வது முறையாக டி20 கிரிக்கெட்டில் 200 ரன்களைக் கடந்து அசத்தியுள்ளது.
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த ஒரு அணியும் ஒரு ஆண்டில் எட்டு முறை 200 ரன்கள் அடித்ததில்லை. இந்திய அணி முதல் முறையாக இந்த சாதனையை படைத்துள்ளது.