கிரிக்கெட் (Cricket)

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: நிதிஷ், ரிங்கு சிங் விலகல்- மாற்று வீரர் அறிவிப்பு

Published On 2025-01-25 19:51 IST   |   Update On 2025-01-25 19:51:00 IST
  • காயம் காரணமாக நிதிஷ் ரெட்டி டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார்.
  • ரிங்கு சிங் 2-வது மற்றும் 3-வது டி20 போட்டியில் விளையாட மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய வீரர் நிதிஷ் ரெட்டி காயம் காரணமாக விலகி உள்ளார். மேலும் மற்றொரு வீரரான ரிங்கு சிங் காயம் காரணமாக 2-வது மற்றும் 3-வது டி20 போட்டியில் விளையாட மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்று வீரராக சிவம் துபே, மற்றும் ரமண்தீப் சிங் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ராஜ்கோட்டில் நடைபெறவுள்ள 3-வது போட்டியில் இருந்து இருவரும் இந்திய அணியில் சேர்வார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News