கிரிக்கெட் (Cricket)

ஒரே இன்னிங்ஸ் மட்டும் விளையாடி வெற்றி பெற்ற இங்கிலாந்து: சுவாரசியமான செஞ்சுரியன் டெஸ்ட்

Published On 2024-10-02 23:29 GMT   |   Update On 2024-10-02 23:29 GMT
  • முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 248 ரன்களில் டிக்ளேர் செய்தது.
  • அடுத்து ஆடிய இங்கிலாந்து கடைசி நாளில் 251 ரன்கள் எடுத்து வென்றது.

செஞ்சுரியன்:

இங்கிலாந்து அணி கடந்த 2000-ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. 4 போட்டிகள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 2-0 என முன்னிலை பெற்றது.

இரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 8 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் லான்ஸ் குளூஸ்னர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டேரில் கலினன் 40 ரன்னும், ஷான் பொல்லாக், பீட்டர் ஸ்டிரைடோம் தலா 30 ரன்னும் எடுத்தனர்.

மழை காரணமாக 2, 3, 4-ம் நாள் ஆட்டங்கள் பாதிக்கப்பட்டன. கடைசி நாளில் போட்டி தொடர்ந்தது. டிராவில் முடியும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் 3வது நடுவரின் ஒப்புதலுடன் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை ஆடாமலும், தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சை ஆடாமலும் இருந்தனர்.

5வது நாளில் இங்கிலாந்து வெற்றிபெற 249 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அலெக் ஸ்டூவர்ட், மைக்கேல் வாகன் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இருவரும் அரை சதம் கடந்தனர். ஸ்டூவர்ட் 73 ரன்னும், வாகன் 69 ரன்னும் எடுத்தனர்.

இறுதியில், இங்கிலாந்து 75.1 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 251 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

ஆனாலும், தென் ஆப்பிரிக்க அணி 2-1 என டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

147 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் இந்த டெஸ்ட் போட்டியில் தான் ஒரே இன்னிங்ஸ் மட்டும் ஆடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News