கிரிக்கெட் (Cricket)
null

வாஷிங்டன் சுந்தருக்கு ரிஷப் பண்ட் கொடுத்த அட்வைஸ்: ஏற்பட்டதோ பின்விளைவு- காரணம் ஏன் தெரியுமா?

Published On 2024-10-25 02:32 GMT   |   Update On 2024-10-25 02:32 GMT
  • வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
  • அஜாஸ் பட்டேலுக்கு எதிராக ரிஷப் பண்ட் வழங்கிய ஆலோசனை வீடியோ மைக்கில் பதிவானது.

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி புனேயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த நியூசிலாந்து முதல் நாள் ஆட்டத்தின்போது 259 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகள் சாய்த்தார். இதில் ஐந்து பேரை க்ளீன் போல்டாக்கினார்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட், ஸ்டம்பிற்கு பின்னால் நின்று பேசிக் கொண்டே இருப்பார். எதிரணி பேட்ஸ்மேன்களை ஸ்லெட்ஜிங் செய்வதில் வல்லவர். அதோடு இந்திய பந்து வீச்சாளர்களுக்கு அடிக்கடி ஆலோசனை வழங்குவார்.

பேட்ஸ்மேன்களை நன்றாக கணித்து பந்தை அப்படி வீசு... இப்படி வீசு... என ஆலோசனை வழங்குவார்.

நேற்று வாஷிங்டன் சுந்தர் பந்து வீசும்போதும் அப்படி சொல்லிக் கொண்டிருந்தார். வாஷிங்டன் சுந்தர் ஐந்து விக்கெட் வீழ்த்திய நிலையில், அஜாஸ் பட்டேல் பேட்டிங் செய்ய வந்தார்.

அப்போது வாஷிங்டன் சுந்தரிடம் ரிஷப் பண்ட் ஆலோசனை வழங்கினார். ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே கொஞ்சம் புல்லராக (Little Fuller) பந்து வீசுங்கள் எனத் தெரிவித்தார். வாஷிங்டன் சுந்தருக்கு இந்தி தெரியும். ஆங்கிலத்தில் பேசினால் அஜாஸ் பட்டேல் புரிந்து கொள்வார் என்பதால் ரிஷப் பண்ட் இந்தியில் பேசினார்.

வாஷிங்டன் சுந்தரும் அப்படியே வீசுவார். அந்த பந்தை சற்றும் யோசிக்காமல் அஜாஸ் பட்டேல் லாங்ஆன் திசையில் தூக்கி அடித்து பவுண்டரி அடிப்பார்.

உடனே, அஜாஸ் பட்டேலுக்கு இந்தி தெரியும் என்பது எனக்கு எப்படிப்பா தெரியும் என்பார் ரிஷப் பண்ட். இது மைக் ஸ்டம்பில் பதிவாகியுள்ளது. ஆலோசனைக் கூறிய நிலையில் அது பின்விளைவை ஏற்படுத்தியுள்ளது.

அஜாஸ் பட்டேல் மும்பையில் பிறந்தவர். 8 வயது வரை இங்கேதான வாழ்ந்தார். அதன்பின்னர்தான் நியூசிலாந்து சென்ற குடியேறினார். இதனால் இந்தி அவருக்கு தெரிந்திருப்பது ஆச்சர்யம் அளிக்கும் விசயம் இல்லை.

இருந்தபோதிலும் அதன்பின் வாஷிங்டன் சுந்தர் அவரை க்ளீன் போல்டாக்கினார்.

Tags:    

Similar News