விளையாட்டு

பேட்மிண்டனில் வெள்ளி வென்ற சீன வீராங்கனை: அடுத்து செய்த செயலால் ரசிகர்கள் நெகிழ்ச்சி

Published On 2024-08-05 17:28 IST   |   Update On 2024-08-05 17:28:00 IST
  • பேட்மிண்டன் ஒற்றையர் இறுதிப்போட்டியில் தென்கொரிய வீராங்கனை தங்கம் வென்றார்.
  • சீன வீராங்கனை ஹி பிங் ஜியாவ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

பாரீஸ்:

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இன்று நடந்த பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் தென்கொரிய வீராங்கனை அன் செ யங், சீன வீராங்கனை ஹி பிங் ஜியாவ் உடன் மோதினார். இதில் தென்கொரிய வீராங்கனை 21-13, 21-16 என்ற செட் கணக்கில் வென்று தங்கம் வென்றார். தோல்வி அடைந்த சீன வீராங்கனை வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இந்நிலையில், சீன வீராங்கனை ஹி பிங் ஜியாவ் வெள்ளிப் பதக்கம் பெற்றதும், தன் கையில் ஸ்பெயின் நாட்டை நினைவு கூரும் வகையில் சிறிய பின் வைத்திருந்தார்.

அவரது இந்த செயல் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினுக்கு இந்தப் பதக்கத்தை சமர்ப்பிப்பது போல இருந்தது. சீனா வீராங்கனையின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அரையிறுதியில் கரோலினா மரின் முன்னிலை பெற்றிருந்தபோது காயத்தால் போட்டியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News