எப்.ஐ.எச். மகளிர் புரோ ஹாக்கி லீக்: இந்திய மகளிர் அணி அறிவிப்பு
- 2023- 2024 எப்.ஐ.எச். மகளிர் புரோ ஹாக்கி லீக் சீசனுக்கான அடுத்த கட்ட ஆட்டங்கள் பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்தில் நடைபெற உள்ளன.
- பெல்ஜியத்தில் வரும் 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரையிலும், இங்கிலாந்தில் அடுத்த மாதம் 1-ம் தேதி முதல் 9-ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளன.
புதுடெல்லி:
2023- 2024 எப்.ஐ.எச். மகளிர் புரோ ஹாக்கி லீக் சீசனுக்கான அடுத்த கட்ட ஆட்டங்கள் பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்தில் நடைபெற உள்ளன. அதன்படி பெல்ஜியத்தில் வரும் 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரையிலும், இங்கிலாந்தில் அடுத்த மாதம் 1-ம் தேதி முதல் 9-ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளன.
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய மகளிர் ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு சலிமா டெடெ கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக நவ்னீத் கவுர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சலிமா டெடெ (கேப்டன்), நவ்னீத் கவுர், சவிதா, பிச்சு தேவி கரீபம், நிக்கி பிரதான், உடிதா, ஐஷிகா சவுத்ரி, மோனிகா, ஜோதி சவுத்ரி, மஹிமா சவுத்ரி, வைஷ்னவி விடல் பால்கே, நேஹா, ஜோதி, பல்ஜீத் கவுர், மனீஷா சவுகான், லால்ரேம்சியாமி, மும்தாஜ் கான், சங்கீதா குமாரி, தீபிகா, ஷர்மிளா தேவி, பிரீத்தி துபே, வந்தனா கட்டாரியா, சுனேலிட்டா டோப்போ, தீபிகா சோரேங்.