கிரிக்கெட் (Cricket)

ஆஸ்திரேலியா-னா அடிப்பேன்.. சதம் விளாசிய விராட்.. 534 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

Published On 2024-11-24 09:35 GMT   |   Update On 2024-11-24 09:35 GMT
  • சுமார் ஓர் ஆண்டுக்கு பிறகு விராட் கோலி சதம் விளாசியுள்ளார்.
  • இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 487 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது.

பெர்த்:

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை (2024-25) தொடரின் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 150 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 104 ரன்களில் சுருண்டது.

இதனையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 90 ரன்களும் , கேஎல் ராகுல் 62 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இன்று 3-ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா தரப்பில் ராகுல் 77 ரன், ஜெய்ஸ்வால் 161 ரன், படிக்கல் 25 ரன், ரிஷப் பண்ட் 1 ரன் மற்றும் ஜூரெல் 1 ரன் எடுத்து அவுட் ஆகினர்.

விக்கெட்டுகள் இழந்தாலும் மறுபுறம் விராட் கோலி சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார் .தொடர்ந்து பொறுப்புடன் விளையாடிய விராட் கோலி சதமடித்து அசத்தினார். இது டெஸ்டில் அவரது 30-வது சதமாகும். சுமார் ஓர் ஆண்டுக்கு பிறகு விராட் கோலி சதமடித்து அசத்தி உள்ளார்.

இதனையடுத்து இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 487 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 534 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News