டி20 கிரிக்கெட்டில் 5,000 ரன்கள், 100 விக்கெட்டுகள் எடுத்து ஹர்திக் பாண்ட்யா சாதனை
- டாஸ் வென்ற பரோடா அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
- அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா 35 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார்.
சயத் முஷ்டாக் அலி கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் இன்று குஜராத் - பரோடா அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற பரோடா அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய பரோடா அணி 19.3 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய பரோடா அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 35 பந்துகளில் 74 ரன்கள் குவித்து 1 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினார்.
இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 5,000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்கள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ஹர்திக் பாண்ட்யா படைத்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் தற்போது வரை ஹர்திக் பாண்ட்யா 5067 ரன்கள் மற்றும் 180 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.