விளையாட்டு

பாரீஸ் ஒலிம்பிக்: ஹாக்கியில் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது இந்தியா

Published On 2024-08-04 15:25 IST   |   Update On 2024-08-04 15:26:00 IST
  • காலிறுதியில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் கிரேட் பிரிட்டனை எதிர்கொண்டது.
  • இந்தப் போட்டியில் இரு அணிகளும் 1-1 என கோல் அடித்து சமனில் முடிந்தது.

பாரீஸ்:

பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஹாக்கி அணியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன.

காலிறுதியில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் கிரேட் பிரிட்டன் அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என சமனிலை பெற்றது. ஹர்மன்பிரித் ஒரு கோல் அடித்தார்.

இரண்டாவது பாதியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் இந்திய அணி 4-2 என்ற கணக்கில் வென்றுஅரையிறுதிக்கு முன்னேறியது.

அமித் ரோஹிதாசுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டதால், இந்திய அணி மொத்தம் 10 வீரர்களைக் கொண்டு விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News