ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: சீனாவை 3-0 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய பெண்கள் அணி
- நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம்.
- சீனா மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று 2-வது இடத்தை பிடித்துள்ளது.
ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற சீனாவை 3-0 என வீழ்த்திய இந்திய பெண்கள் ஹாக்கி அணி ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
உலகத் தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் சீனாவை வீழ்த்தியதன் மூலம் இந்தத் தொடரில் இந்தியா தொடர்ந்து 4-வது வெற்றியை பெற்றுள்ளது.
32-வது நிமிடத்தில் சங்கீதா குமார் முதல் கோல் அடித்தார். 37-வது நிமிடத்தில் கேப்டன் சலிமா டேடே மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் இந்தியா 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது. கடைசி நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்ப பயன்படுத்தி தீபிகா கோல் அடித்தார்.
4 வெற்றிகள் மூலம் இந்திய அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. சீனா நான்கு போட்டிகளில முடிவில் 3 வெற்றிகளுடன் 2-வது இடம் பிடித்துள்ளது. ராபின் ரவுண்டு சுற்றில் இந்தியா தனது கடைசி லீக்கில் ஜப்பானை எதிர்கொள்கிறது.
ஆறு அணிகள் விளையாடும் இந்த தொடரில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.