விளையாட்டு

ஆசிய விளையாட்டு கிரிக்கெட் - இந்தியா, நேபாளம் அணிகள் நாளை காலிறுதியில் மோதல்

Published On 2023-10-02 07:13 GMT   |   Update On 2023-10-02 07:13 GMT
  • இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியவை நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றன.
  • லீக் ஆட்டங்கள் முடிவில் நேபாளம், ஹாங்காங், மலேசியா ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

பீஜிங்:

ஆசிய விளையாட்டில் ஆண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகள் காலிறுதிக்கு நேரடியாக தகுதி பெற்றன.

நேபாளம், மாலத்தீவு, மங்கோலியா, ஹாங்காங், ஜப்பான், கம்போடியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய 9 அணிகள் லீக் சுற்றில் விளையாடின. அவைகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. லீக் ஆட்டங்கள் முடிவில் நேபாளம், ஹாங்காங், மலேசியா ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

இந்நிலையில், நாளை முதல் காலிறுதி ஆட்டங்கள் தொடங்குகின்றன. நாளை காலை 6.30 மணிக்கு நடக்கும் முதல் காலிறுதியில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதுகின்றன. 11.30 மணிக்கு நடக்கும் 2-வது காலிறுதியில் பாகிஸ்தான், ஹாங்காங் மோதுகின்றன.

4-ம் தேதி நடக்கும் 3-வது காலிறுதியில் இலங்கை, ஆப்கானிஸ்தான் (காலை 6.30 மணி), 4-வது காலிறுதியில் வங்காளதேசம், மலேசியா (காலை 11.30) பலப்பரீட்சை நடத்துகின்றன.

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணியில் திலக் வர்மா, ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ஷிவம் துபே, ராகுல் திரிபாதி, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ்கான், முகேஷ் குமார் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

Tags:    

Similar News