விளையாட்டு
ஆசிய கோப்பை கால்பந்து: இந்திய அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா
- ஆட்டத்தின் முதல் பாதி கோல் ஏதுமின்றி 0 - 0 என முடிந்தது.
- 2-வது பாதியில் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தியது.
கத்தார்:
ஆசிய கோப்பை கால்பந்தாட்ட தொடர் கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற குரூப் சுற்று ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
தொடக்கம் முதல் இரு அணிகளும் தீவிர தடுப்பாட்டத்தில் ஈடுபட்டதால் ஆட்டத்தின் முதல் பாதி கோல் ஏதுமின்றி 0 - 0 என முடிந்தது.
இதனை தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதியில் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் ஜாக்சன் இர்வின் கோல் அடித்தார். இதனை தொடர்ந்து 73-வது நிமிடத்தில் ஜோர்டன் போஸ் கோல் அடித்தார்.
இதனால் ஆஸ்திரேலிய அணி 2-0 என முன்னிலை பெற்றது. பதிலடி கொடுக்க கடுமையாக போராடியும் இந்திய அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்ட நேர முடிவில் 2-0 என ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.