ஆசிய விளையாட்டு போட்டி - வில்வித்தையில் இந்திய கலப்பு அணி காலிறுதிக்கு தகுதி
- வில்வித்தையில் இந்திய கலப்பு அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
- காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்கள் நாளை நடைபெறுகின்றன.
பீஜிங்:
ஆசிய விளையாட்டின் வில்வித்தை போட்டியில் இன்று ரிகர்வ் கலப்பு அணி எலிமினேசன் பிரிவில் அதானு தாஸ், அங்கிதா பகத் ஆகியோரை கொண்ட இந்திய அணி 6-2 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
காம்பவுண்ட் கலப்பு அணி எலிமினேசன் பிரிவில் பிரவீன் ஓஜஸ்- ஜோதி சுரேகா வெண்ணாம் ஆகியோரை கொண்ட இந்திய அணி 159-151 என்ற புள்ளி கணக்கில் ஐக்கிய அரபு எமிரேட்சை வீழ்த்தியது.
காம்பவுண்ட் ஆண்கள் அணி எலிமினேசன் பிரிவில் பிரவின் ஓஜஸ், அபிஷேக் வர்மா, ஜவ்கர் பிரதமேஷ் ஆகியோரை கொண்ட இந்திய அணி 235-219 என்ற புள்ளி கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.
ரிகர்வ் பெண்கள் அணி எலிமினேசன் பிரிவில் அங்கிதா பகத், பஜன் கவூர், சிம்ரன்ஜீத் கவூர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 5-1 என்ற கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தியது.
ரிகர்வ் ஆண்கள் அணி எலிமினேசன் பிரிவில் அதானு தாஸ், தீராஜ், துஷார் பிரபாகர் ஆகியோர் கொண்ட இந்திய அணி 6-0 என்ற கணக்கில் ஹாங்காங்கை தோற்கடித்தது.