விளையாட்டு

பாரீஸ் ஒலிம்பிக்: குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை லவ்லினா ஏமாற்றம்

Published On 2024-08-04 15:38 IST   |   Update On 2024-08-04 15:38:00 IST
  • ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியின் காலிறுதி சுற்று இன்று நடந்தது.
  • இதில் இந்தியாவின் லவ்லினா போர்ஹோகெய்ன் தோல்வி அடைந்தார்.

பாரீஸ்:

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இந்நிலையில், பெண்கள் குத்துச்சண்டை 75 கிலோ பிரிவில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹெய்ன், சீன வீராங்கனை லீ குயான் உடன் மோதினார்.

இந்தப் போட்டியில் லவ்லினா 1-4 என்ற புள்ளிக்கணக்கில் சீன வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார். இதன்மூலம் லவ்லினா ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேறினார்.

ஹாக்கியில் இந்திய ஆண்கள் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

Tags:    

Similar News