துப்பாக்கி சுடுதலில் வெண்கல பதக்க போட்டிக்கு தகுதி பெற்றது சரப்ஜோத் சிங் - மனுபாகெர் ஜோடி
- சரப்ஜோத் சிங் - மனுபாகெர் ஜோடி 3 ஆம் பிடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
- அர்ஜுன் சிங் சீமா- ரிதம் சங்வான் ஜோடி 7 ஆம் இடம் பிடித்து போட்டியிலிருந்து வெளியேறியது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இன்று 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவு தகுதி சுற்றுப் போட்டி பகல் 12.45 மணிக்கு நடைபெற்றது. அதில், இந்தியாவை சேர்ந்த சரப்ஜோத் சிங் - மனுபாகெர் ஜோடி 3 ஆம் பிடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் வெண்கல பதக்கத்திற்கான போட்டிக்கு சரப்ஜோத் சிங்- மனுபாகெர் ஜோடி முன்னேறியுள்ளது.
அதே சமயம், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவு தகுதி சுற்று போட்டியில் இந்தியாவை சேர்ந்த அர்ஜுன் சிங் சீமா- ரிதம் சங்வான் ஜோடி 7 ஆம் இடம் பிடித்து போட்டியிலிருந்து வெளியேறியது.
10 மீட்டர் ஏர் ரைபிள் பெண்களுக்கான இறுதிப் போட்டியில் ரமிதா ஜிண்டால் ஏழாவது இடத்தை பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
முன்னதாக, இந்திய ஆடவர் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி -சிராக் ஷெட்டி ஜோடி ஜெர்மனியின் மார்வின் சீடல் மற்றும் மார்க் லாம்ஸ்ஃபஸ் ஆகியோருக்கு எதிரான ஆட்டம் ஜெர்மனி வீரர் மார்க்கின் முழங்கால் காயம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.