விளையாட்டு

தேசிய விளையாட்டு போட்டி: போல்வால்ட் போட்டியில் தமிழக வீரர் சாதனையை முறியடித்த ம.பிரதேச வீரர்

Published On 2025-02-11 18:14 IST   |   Update On 2025-02-11 18:14:00 IST
  • 38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தரகாண்ட் மாநிலத்தில் 7 நகரங்களில் நடந்து வருகிறது.
  • 2022-ம் ஆண்டு போட்டியில் தமிழக வீரர் சுப்ரமணி சிவா 5.31 மீட்டர் உயரம் தாண்டியதே சாதனையாக இருந்தது.

டேராடூன்:

38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தரகாண்ட் மாநிலத்தில் 7 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நாடு முழுவதும் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

தடகளத்தில் நேற்று நடந்த ஆண்களுக்கான போல்வால்ட் (கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல்) பந்தயத்தில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 19 வயது தேவ்குமார் மீனா 5.32 மீட்டர் உயரம் தாண்டி புதிய தேசிய சாதனை படைத்ததுடன் தங்கப்பதக்கத்தையும் தக்கவைத்தார்.

இதற்கு முன்பு 2022-ம் ஆண்டு போட்டியில் தமிழக வீரர் சுப்ரமணி சிவா 5.31 மீட்டர் உயரம் தாண்டியதே சாதனையாக இருந்தது.

Tags:    

Similar News