பாரீஸ் ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன்: இந்திய ஜோடி பங்கேற்ற போட்டி ரத்து
- இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி மற்றும் ஜெர்மனி வீரர்கள் மோதுவதாக இருந்தது.
- ஜெர்மனி வீரர்கள் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியதால் போட்டி ரத்தானது.
பாரீஸ் ஒலிம்பிக்:
பாரீஸ் ஓலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆண்கள் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி மற்றும் ஜெர்மனி வீரர்கள் மோதுவதாக இருந்தது. ஆனால் எதிரணியான ஜெர்மனி வீரர்கள் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியதால் போட்டி ரத்தானது.
இதனால் குரூப் சி-ல் உள்ள 4 அணிகளில் ஜெர்மனி விலகியதை அடுத்து காலிறுதிக்கான போட்டியில் 3 அணிகள் உள்ளன. இந்திய வீரர்கள் ஏற்கனவே ஒரு போட்டியில் வென்று முதலிடத்தில் இருப்பதால் காலிறுதி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இதேபோல் பெண்கள் இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா- தனிஷா க்ராஸ்டோ ஜோடி ஜப்பான் வீராங்கனைகளான சிஹாரு ஷிடா -நமி மாட்சுயாமா ஜோடியுடன் மோதினர்.
இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்திய ஜப்பான் அணி 21-11, 21-12 என்ற செட் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.