விளையாட்டு
ஒலிம்பிக் வில்வித்தை: தரவரிசை சுற்றில் 4ம் இடம் பிடித்து காலிறுதியை உறுதி செய்தது இந்திய மகளிர் அணி
- பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது.
- வில்வித்தை மகளிர் பிரிவுக்கான தரவரிசையை முடிவு செய்வதற்கான சுற்று நடந்தது.
பாரிஸ்:
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, குதிரையேற்றம், ஹாக்கி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் களம் காண்கின்றனர்.
இந்நிலையில், வில்வித்தை மகளிர் பிரிவுக்கான தரவரிசையை முடிவு செய்வதற்கான சுற்று இன்று நடைபெற்றது. இதில் 72 அம்புகள் எய்யப்பட்டன.
இதில் தென் கொரியா 2016 புள்ளிகளுடன் முதல் இடத்தையும், சீனா 1996 புள்ளிகளுடன் 2வது இடத்தையும், மெக்சிகோ 1986 புள்ளிகளுடன் 3வது இடத்தையும், இந்தியா 1983 புள்ளிகளுடன் 4வது இடத்தையும் பிடித்தன.
இதன்மூலம் வில்வித்தை பிரிவில் இந்திய மகளிர் அணி காலிறுதி சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது.